Google

Sunday, June 19, 2011

உற்பத்தியாளர் குழுமம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

 ம்பனிகள் (திருத்த) சட்டம், 2002, (Act 1 of 2003), 05-02-2003 அன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த திருத்த சட்டத்தில் உற்பத்தியாளர் குழுமம் என்ற புதிய வகையான குழுமம் பற்றியும், அவற்றை பதிவு செய்யும் சட்ட முறைகள் பற்றியும்  விளக்கமாகவும், விரிவாகவும் வரைவு செய்யப்பட்டுள்ளன. 
டாக்டர் Y. K. அலாக் அவர்களை தலைவராக கொண்ட உயர் மட்ட குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆரம்ப கட்ட உற்பத்தி பொருள் (Primary Produce)

விவசாயம், கால் நடை வளர்ப்பு, தோட்டக்கலை, பூந்தோட்டம், மீன்வளர்ப்பு, திராட்சை தோட்டம், காடுவளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கைத்தறி, கைவினை, குடிசை தொழில்கள், ஆகிய செயல்பாடுகளிலிருந்து பெறப்படும் பொருட்கள், அவற்றின் உப பொருட்கள், உப பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், மேற்கண்ட உற்பத்தி பொருட்களை மேம்படுத்தவும் அவற்றுக்கு உதவவும் செய்யப்படும் துணை பொருட்கள் அல்லது துணை சேவைகள் ஆகியவை 'ஆரம்ப கட்ட உற்பத்தி பொருள்' (Primary Produce) என்று அழைக்கப்படும். 

மேற்கண்ட செயல்பாடுகளில் ஈடுபடுவோர் உற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுவர்.   


உற்பத்தியாளர் குழுமம் என்றால் என்ன?
கம்பனி சட்டம், 1956 ன் பகுதி IX A கீழுள்ள சட்ட வரைவுக்குள் உற்பத்தியாளர்களால் பிரிவு 581B ல் உள்ள நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் குழுமம் உற்பத்தியாளர் குழுமம் என்று அழைக்கப்படும். 

உற்பத்தியாளர் குழுமத்தை கீழ்க்கண்டவர்கள் உருவாக்கலாம்;

  1. குறைந்தது பத்து உற்பத்தியாளர்கள்,
  2. குறைந்தது இரண்டு உற்பத்தியாளர்கள் சங்கங்கள்/நிறுவனங்கள்  அல்லது குழுமங்கள்
  3. மேற்கண்ட கலவையில் குறைந்தது பத்து.


 உற்பத்தியாளர் குழுமங்களின் சிறப்பம்சங்கள் யாவை?


  1. குறைந்தது இரண்டு பேர் என்ற சலுகையை தவிர வரையறுக்கப்பட்ட தனியார் குழுமங்களுக்கு உள்ள அணைத்து சலுகைகளும் பொருந்தும்.
  2. தனியார் வரையறுக்கப்பட்ட குழுமமாக மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கபட்டாலும், ஐம்பதுக்கு மேற்பட்ட உறுபினர்களை சேர்க்கும் சிறப்பு சலுகை உண்டு.
  3. எந்த சூழ்நிலையிலும் பொது நிறுவனமாக கருதப்படாது.
  4. பங்குகளை சந்தைகளில் விற்கமுடியாது, மாறாக இயக்குனர் குழுவின் அனுமதியுடன் நேரடி மற்றம் செய்யலாம். இதனால், பண முதலைகளிடம் குழுமம் விலைபோகாமல் பாதுகாக்கப்படும் என்று கருதப்படுகின்றது.
  5. எத்தனை பங்குகள் வைத்திருந்தாலும் ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற கூட்டுறவு முறையே பின்பற்றப்படுகின்றது. 
  6. பங்குதாரர்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அல்லது வரையறை செய்யப்பட்ட (Limited Return) அளவு பங்கீட்டு தொகை கொடுத்தபிறகு மீதமுள்ள உபரி ஆதரவாளர் வெகுமதியாக (Patronage Bonus) பிரித்து கொடுக்கப்படும்.
உற்பத்தியாளர்  குழுமத்தின் முக்கிய கட்டுப்பாட்டு சட்ட வரைவுகள்.


  1. குழுமம் பதிவு செய்யப்பட 90 நாட்களுக்குள் முதல் பொது கூட்டம் நடைபெறவேண்டும்.
  2. நன்கொடைகள் கடந்த ஆண்டின் அறிவிக்கப்பட்ட லாபத்தில் மூன்று சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
  3. அரசியல் கட்சிகளுக்கோ அரசியல் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காகவோ பணம் கொடுக்கவோ சேவை செய்யவோ கூடாது.
  4. ஐந்திற்கு குறையாமலும் பதினைந்திற்கு மிகாமலும் இயக்குனர்கள் தேர்ந்தேடுக்கப்படவோ, நியமிக்கப்படவோ வேண்டும். 
  5.  வரையறுக்கப் பட்ட பொறுப்பு
  6. உறுப்பினர்களின் ஆரம்ப கட்ட உற்பத்தி பொருட்களில் வணிகம் செய்வது உற்பத்தியாளர் குழுமத்தின் முதன்மை கடமையாகும். 
  7. இயக்குனர்கள் கூட்டம் ஆண்டிற்கு குறைந்தது நான்கு முறை கூட்டப்படவேண்டும். 
  8. முழு நேர தலைமை நிர்வாகி (Chief Executive) கண்டிப்பாக நியமிக்கப்படவேண்டும். அவர் குழுமத்தின் உறுப்பினராக இருக்கக்கூடாது. 
  9. பதினைந்து மாத  இடைவெளிக்குள் ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவேண்டும். 
  10. உட் தணிக்கையாளர் (Internal Auditor) நியமிக்கப்படவேண்டும். 
  11. தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் சராசரி வணிகம் ஐந்து கோடியை தாண்டினால், குழும செயலர் (Company Secretary)  ஒருவரை முழுநேர அலுவலராக நியமிக்கவேண்டும். 
ஆரம்பித்து வைப்பவர் (Initiator) என்றால் என்ன? 
சட்டத்தில் இப்படிப்பட்ட யாரைப்பற்றியும் வரையறையோ குறிப்புரையோ இல்லை. உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு இந்த வித குழுமத்தை பற்றிய அறிவூட்டி அதன் மூலம் ஏற்படும் நன்மைகளை பற்றி எடுத்துரைத்து ஆரம்பக்கட்டத்தில் குழுமம் உருவாக முயற்சி செய்பவர்களை initiator என்று கூறலாம். 


உற்பத்தியாளர் குழுமம் பதிவு செய்ய தேவைப்படும் ஆவணங்கள் யாவை?
  1. நிரந்தர கணக்கு எண் அட்டை. (PAN)
  2. அடையாள அட்டை
  3. முகவரி சான்று
  4. இயக்குனர் அடையாள எண் (Director Identity Number - DIN)
  5. இலக்கமுறை ஒப்பம். (Digital Signature)
  6. புகைப்படங்கள் (தேவையான எண்ணிக்கை)
குழுமப்பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட வேண்டிய படிவங்கள் யாவை?
முன்பு சொல்லப்பட்ட ஆவணங்களுடன் ஒரு பட்டய கணக்காயரையோ (Chartered Accountant) அல்லது குழும செயலரையோ (Company Secretary) அணுகினால் அனைத்து ஆவணங்களையும் அவர்களே முன்னின்று தயாரித்து உற்பத்தியாளர் குழுமத்தை முறையாக பதிவு செய்து கொடுப்பார்கள். 

வேறு தகவல்களுடன் மீண்டும் சந்திக்கிறேன்!
CA. A. Joseph Arputharaj
9842677056

Tuesday, May 10, 2011

Obtaining Section 25 License Made Easy!

Dear all,

Hitherto, Section 25 License under The Companies Act, 1956, read along with Companies Regulation, 1956 was issued by the Regional Directors of the Respective Jurisdictions.  Companies (Amendment) Regulation, 2011 has the following effects;

1.  Regional Director has been relieved, and the Respective Registrar of Companies have been entrusted with the procedures of issuing section 25 Licenses.

2.  Requirements to issue Advertisement in Regional Newspaper in Local Language and in National Newspaper in English has been withdrawn.  (This saves a full one month in the process of Registration of a section 25 Company)

updated Companies Regulations, 1956 (as on May-2011) may be viewed or downloaded from  the following link

https://sites.google.com/site/importantcirculars/

CA. A. Joseph Arputharaj
9842677056